ஒரே நாளில் அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள் 100% -Working


அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமா

அனைவருக்குமே அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் பல அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தைப் பராமரிப்பார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் நிறைய பணம் செலவழித்து அழகு நிலையங்களுக்கு சென்றால் மட்டும் அழகு வந்துவிடாது. பொதுவாக அழகு என்பது ஒருவர் மேற்கொள்ளும் செயல்களின் மூலம் தான் வருகிறது. சிலருக்கு இயற்கையாகவே சருமம் மென்மையாக இருக்கும். ஒருசிலருக்கு சருமம் கடினமாக இருக்கும்.



இவ்வாறு கடினமாக இருக்கும் சருமத்தை இயற்கையான முறையில் மென்மையாக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தினமும் பின்பற்ற வேண்டும் மற்றும் ஒருசில செயல்களை செய்யவே கூடாது. அப்படி சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களை பின்பற்றினால், நிச்சயம் சருமம் மென்மையாக இருக்கும்.

பதிவின் சிறப்பம்சங்கள் 

  1. மேக் அப்பை நீக்கவும்
  2. முகத்தை அடிக்கடி கழுவ வேண்டாம்
  3. தண்ணீர் அதிகம் குடிக்கவும்
  4. பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்  

மேக் அப்பை நீக்கவும்

முடிந்த வரையில் மேக் அப் போடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக, மேக் அப் போட்டால், இரவில் மறக்காமல் சுத்தம் செய்து விட்டு பின்பு தூங்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தை வறட்சியடையச் செய்து, அதன் மென்மைத் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

முகத்தை அடிக்கடி கழுவ வேண்டாம்

முகத்தை அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால், சருமம் வறட்சியுடன் காணப்படும். ஏனெனில் சோப்பானது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை முற்றிலும் சருமத்தில் இருந்து வெளியேற்றிவிடும். எனவே ஒரு நாளைக்கு 1-2 முறை கழுவினால் போதுமானது.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவாகவும், மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, சருமம் பொலிவோடும், மென்மையாகவும் மாறும். உதாரணமாக, சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களை எதிர்க்கும். அதேப் போன்று கேரட் மற்றும் பீட்ரூட்டை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் , சருமத்தை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.




Post a Comment